Friday, May 11, 2007

சக்கரை நிலவே பெண் நிலவே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

(சக்கரை.....)

மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

(சக்கரை.....)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை
அன்பே உன் புண்ணகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புண்ணகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா
ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதை அல்ல கல்லின் சுவரா?

(கவிதை பாடின.....)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

(கவிதை பாடின.....)

4 comments:

Unknown said...

Karthi

Unknown said...

Nice song

Anonymous said...

I like this melody song

Anonymous said...

சுகமான ராகம் பாவம்