Thursday, May 17, 2007

ஜீலை மலர்களே

ஆ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

பெ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி

ஆ: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்

பெ: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்

ஆ: யார் நீ குளிரான பூவா

பெ: யார் நீ மெய்யான பொய்யா

பெ: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே

ஆ: ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே

பெ: இதயமாய் இம்சைகள் செய்தாய்

ஆ: அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
(ஜீலை)

0 comments: