Friday, February 26, 2016

நீயும் நானும் சேர்ந்தே செல்லும்

பாடல்  : நீயும் நானும் சேர்ந்தே 
படம் : நானும் ரவுடிதான் 
வரிகள் : விக்னேஷ் சிவன்
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத் , நீத்தி மோகன்

###############888888888888##################

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே
ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றாய் வீசினாய் காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவுநீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள (2)


தள்ளிப் போகாதே..


பாடல்  : தள்ளிப் போகாதே..
படம் : அச்சம் என்பது மடமையடா
வரிகள் : தாமரை
இசை : ஏ.ஆர். ரகுமான்
பாடியவர் : சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..

ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

கண்ணெல்லாம்..  நீயேதான்..
நிற்கின்றாய்..  விழியின்மேல்
நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..

நகரும் நொடிகள் கசையடிப் போலே
முதுகின் மேலே விழுவதினாலே
வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள்
எழுதா மொழிகள் எனது.. !!

கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே..
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்..
ஏன் அதில் தோற்றேன்.? ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.? தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. (2)

தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
(தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )

தேகம் தடை இல்லை என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
ஆனால் அது பொய் தான் என நீயும்
அறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா..

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...

கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்..
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்..
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..

நொடி நொடியாய் நேரம் குறைய..
என் காதல் ஆயுள் கறைய..
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..

விதியின் சதி விளையாடுதே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ அன்பே..

Thursday, February 25, 2016

நெஞ்சோரமா ஒரு காதல்


பாடல்  : நெஞ்சோரமா ஒரு காதல் 
வரிகள் : ஹிப்பாப் தமிழா
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர் : கவுசிக் கிரிஷ் , பத்மலதா

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து 
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும் 
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்
 
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட

அலுங்குறேன் குலுங்குறேன் ...

பாடல்  : அலுங்குறேன் குலுங்குறேன் 
படம் : சண்டிவீரன்
இசை : அருணகிரி
பாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ்
வரிகள்: மோகன் ராஜன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

கோணலா மாணலா இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

யாருமில்லா தனியரங்கில்

படம்:   காவியத்தலைவன்
இசை: ARரஹ்மான்
பாடலாசிரியர்: பாவிஜய்
பாடியவர்கள்: ஸ்வேதாமோகன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனியரங்கில்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில் !….

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்....

Wednesday, February 24, 2016

அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்


பாடல்  : அந்த சாலை ஓரம் 
படம் : கதகளி
வரிகள் : ஹிப்பாப் தமிழா
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர் : ஹிப்பாப் தமிழா

###############888888888888##################

அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இருகைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்

உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

தேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே
நான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே
நான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே

உந்தன் மடியினிலே  ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு


பாடல்  : காதல் கிரிக்கெட்டு 
படம் : தனி ஒருவன்
வரிகள் : ஹிப்பாப் தமிழா
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர் : கரேஸ்மா ரவிசந்திரன்

###############888888888888##################

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
ரோமன்ஷ் ரோமன்ஷ் இது தான் என் சான்ஸ்
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
காதல் கிரிக்கெட்டு

உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத
பார்த்து ஊரு சிரிகுதுடா என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்னை நீ எப்ப ஏத்துகுவ என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

மீனு வலையில மாட்டலையே
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து
எனை போல் அழகி உலகில்
யாரும் இல்ல உன் பின்னல் நான்
சுத்துரதால என் அருமை  உனக்கு புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டுதங்கமே உன்னத்தான்


பாடல்  : தங்கமே உன்னத்தான்
படம் : நானும் ரவுடிதான் 
வரிகள் : விக்னேஷ் சிவன்
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத்

###############888888888888##################

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ face அட டட டட டா,
அவ shape  அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரிநான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,உனக்குதான் கேக்கலயே..!

அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,
நீ இல்லாம நான் இல்லடி!

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ  அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!என்ன சொல்ல, ஏது சொல்ல...

பாடல்  : என்ன சொல்ல ஏது சொல்ல,
படம் :தங்கமகன் 
வரிகள் : தனுஷ்
இசை : அனிருத்
பாடியவர் : சுவேதா மேனன்

###############888888888888##################

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)

சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!

சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)