Monday, November 9, 2009

அது ஒரு காலம் அழகிய காலம்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்


(அது ஒரு..)


ஓ.. அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில்
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மருந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

(அது ஒரு..)

ஒரு சின்னத் தாமரை


ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே

என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன் தெரு பார்த்தாலே
என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச்
சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)

உன் குரல் கேட்டாலே அங்கு
குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள்
மட்டும் மோட்சத்தினைச் சேரும்
அனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய
கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது
(ஒரு சின்ன..)

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் ...

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம்
புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி

(வாலிபா வா வா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க

(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே

முதல் முறை உன்னைப்


முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே
நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
என்னை தாயைப் போலத்
தாங்க வேண்டும் மடியினிலே
(முதல் முறை..)

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறிப்போகுதே
நீயும் நினைத்தால் வானவில் வந்துவிடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் பேசிட வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் இருமுறை இறக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும் வரமது என்னாளும் போதும்
நீ சூடும் போதும் வாடும் போது வலித்திடுமே

(முதல் முறை..)

நீ நடந்துபோகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமும்
தோள் இரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நெஞ்சில் தினமுமே
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
இனி மழைமேகம் யாவும்
இறங்கியே உனைத்தேட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போகமாட்டேன்
தெய்வமும் நீ

(முதல் முறை..)


பேசும் பூவே பேசும் பூவே

பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே
பெண்ணே உன்கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தேனே

I like your eyes
I like your smile
The way you talk
You are so inviting

மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்
முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரமெந்திரம் போல ஆனேனே
அன்பே உன் சொற்களா
உன் மௌனமா உன் மென்மையா
உன் உண்மையா உன் உள்ளமா
உன் கள்ளமா உன் வீரம்தான்
எனை கொன்றதா
உன் மீசையா உன் தோள்களா
உன் தோற்றமா உன் பார்வையா
உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான்
எனை தின்றதா

என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே

(பெண்ணே..)

பேசும் பூவே

The way you talk
You ar so inviting

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடு நாள் இரு ந்தேன்
இரவும் பகலும் சி ந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளி ந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அ ந்த நிலா என்னை
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அ ந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
(உன்னை)

(உன்னை)

ஏன் பிற ந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடன்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யோ யோ யோ யோ யோ
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

நீ நெருப்பு என்று தெரி ந்த பின்னும்
உன்னைத் தொடத் துணி ந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமைய மலை என்று தெரி ந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யோ யோ யோ யோ யோ
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை