Sunday, April 4, 2010

நான் போகிறேன் மேலே


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நான் போகிறேன் மேலே

படம்:நாணயம்

இசை:ஜேம்ஸ் வசந்தன்

பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம், சித்ரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே.....

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்...

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா....

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்

(நான் போகிறேன்..)

நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான
நானானனான நான நான நானானனான நான நான


உசுரே போகுதே உசுரே போகுதே ...

இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனசதாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும்
இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ..... மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விறிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

பாம்பா? விழுதா?
ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்து நெஞ்சு
பயப்பட நெனைக்கலியே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா?
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும் இப்போ
தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

கடலினில் மீனாக இருந்தவள் நான்

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

(ஒரு நாள்..)

(கண்ணே..)


சொல்பேச்சு கேட்காத சுந்தரியே


படம்: தில்லாலங்கடி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: ஸ்ரீ வர்த்தினி

பாடல் : சொல் பேச்சு கேட்க்காத

***********************************************************

சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா

தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன்

(சொல்பேச்சு )

அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா

பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே

(சொல்பேச்சு)

அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே

(சொல்பேச்சு)

உன் பேரை சொல்லும் போதே ...

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ...
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ...
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

(உன் பேரை...)

நீ பேரழகில் போர்க்களத்தில்
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை...)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான்
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து
வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)

(உன் பேரை...)

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,

அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு

என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல

பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு

நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா

எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்

தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு

எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்

சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -

அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -

ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே


படம்: காக்க காக்க
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: தாமரை


########################################

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே