Saturday, May 31, 2008

அடடா அடடா

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

தேன் தேன் தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

அலையே அலையே

அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை
ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே
(அலையே.. அலையே.. )

மொட்டுக்குள்ளே வாசம் போலே
கட்டுப்பட்டு நின்றாயே
முட்டிச்செல்லும் காற்றாய் வந்து
தொட்டு திறந்து கொண்டேனே
உனது ஊடல் தீராமல்
எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன் தொல்லை
முகத்திரையை கழட்டிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய பறவை
மடியேறுது மடியேறுது பார் வெளியே
(அலையே.. அலையே.. )

பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க
எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும்
வேரின் வாழ்வு மண்ணோடு
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
கடலோ இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..

உயிரிலே என்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்