Saturday, September 22, 2007

இந்த நிமிடம்

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ

பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா...........

Thursday, September 20, 2007

அழகுக் குட்டிச்செல்லம்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

(பொன்வானம்)
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...

(பொன்வானம்)

Sunday, September 16, 2007

சங்கீத ஜாதிமுல்லை

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் உந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே...

(ஸ்வரங்கள்)

Sunday, September 9, 2007

விழிகளின் அருகினில்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

Friday, September 7, 2007

முதல் மழை

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா

முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Thursday, September 6, 2007

உப்புகல்லு தண்ணீருக்கு

தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது

ஏதுமில்லை வண்ணம் மென்று நானும் வாடினேன்
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன்
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்..
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன் மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள்
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன்

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது

மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே...
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும்
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே..

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது....

ஒரு காதல் தேவதை

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)

பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...

உன் பார்வை

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்

இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்தை

உனை எண்ணி தினம் புல்லரிக்கும்
மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே ..

விலா கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றையும்
முள்ளிரவு என்று செய்தாயே ..

நுரையீரல் தேடும் ஸ்வாஸமே
விழியோரம் ஆடும் ஸ்வப்னமே
மடியேறி வந்தால் சௌக்யமே

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்


சில காதல் இந்கு கல்லறைக்குள்் அடக்கம்
சில் காதல் இந்கு சில்லறைக்குள்் தொடக்கம்
அது போல அல்ல கல்லறையைக் கடந்திடும்
சில்லறையைக் ஜெயித்திடும் என் காதல்

உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போலக் காதல் சிகாகோ-வும் கண்டதில்லை
செஞ்சினாடும் கண்டதில்லை, சோவியத்-தும் கண்டதில்லை என்பேனே.

மழை நாளில் நீதான் வெட்பமே ..
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே.
உளி ஏதும் தீண்டா சிற்பமே. அன்பே

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்

உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்


காதல் வைத்து

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடீ
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

எனக்காச்சு மச்சினிச்சு ஒனக்கச்சு
வேணம் இனி வாய் பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்....
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்..
பழுத்தாச்சு நெஞ்ஜம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட கொடுத்தாச்சு
அணில் இப்பம் துள்ளி குதிக்கலாம்
அப்பப்பம் பல்லும் பதிக்கலாம்
பசியயும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வர சொல்லிட்டு
இலைகளை முடி ஓடுரியே
பசிவந்தா கலங்குவ
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

தடுக்கதே மூடு வந்தா கெடுக்கதே
மஞ்ஜ பூவ மரைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து ஒரங்குமா
கொஞ்ஜம் கொஞ்ஜம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருங்காதே பொன்னான்க்கண்ணி வருக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிரா
முத்ததில் மச்சம் பதிக்கிர...
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயங்களும் இங்கே இன்பமடீ....
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்ட சுழிஉள்ள பையன்
ஏ கானாங் கொளத்து மீனே
ஒன்ன கவுக்க போரேன் நானே...
நீ சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஏங் காதில் சொல்லிச்சு மானே....

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா
நான் கானாங் கொளத்து மீனு
நான் கானாங் கொளத்து மீனு
ஒன்ன கடிக்க போரேன் நானு
நான் சமஞ்ஜதும் ஓ சாமிவந்து
ஓங் காதில் சொல்லிச்சு தானே....
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி

Saturday, September 1, 2007

யாரோ.. யாருக்குள்

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..

ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...