Wednesday, February 15, 2012

ஒரு முறை ஒரு முறை

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்:ஜி.வி.பிரகாஷ், ஆண்ட்ரியா, ஃப்ளாசே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

அந்தியின் வெய்யிலை
பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளம் புராவும் உன் முகமே
உர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேன் நான்

ஒரு மொட் ஆவிழந்த ஒட்டறை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழந்த காதில் சொல்ல எல்லும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான் ….

பலவர்ண வண்ண கற்கள் வாய்த்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ தூங்கவென்று கத கத போர்வை
தேடுகின்றேன் நான் ….

நீ தொட்டுக்கென சிற்பி சங்கு தரவா
மான் குட்டி படம் முத்துச்சரம் தரவா
தேன் குட்டி போல துவல்தாங்கி தரவா
என்ன நான் வாங்க ..

you got me empty on my pocket -stop it
you got me filling like a broke- oh no ..
face-o kili girl,… bommai girl
…make a feel incredible
i see the time, see the place, i wanna know
are you ready for my …
ennadi time, ennadi place, ennadi show
are you ready for my phone ..
gonna get her gonna get her by my side
gonna get her gonna get her in my life
gonna get her gonna get her, wrong or right
gonna get her gonna get her right right right —(X 2 )

சிரிப்பாய் இருக்கும் உன்னக்கு வீட்டில் ..
செயற்கை அருவி தரலாம் ..
இதயம் முழதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் நாணமும்

ஓர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
தள்ளிசென்றால் லப்புதாப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தாள்
என்ன செய்வாளோ ..

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடபேன்
தாண்டினால் என்ன … ……………….

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ooooh..
what it is in your mind that you want too see
what can I get for you ..say
i give you parisu .. girl what ever parisu..girl
you r my thulasi girl, you be so lovable
tell me what you like girl tell me tell me what you like girl
tell me what you like girl tell me tell me what you like girl
coz i would bring the moon down for you
and i would make them green too
and I would do whatever I do
and whatever I do is just for you …

let me rewind,rewind, to a new time
bring the both chimes, until you are mine

உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா ..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா .ஹே …
தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜகானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உன்னக்கு பின்பு வாழ்வதை

…ரொம்ப ரொம்ப அல்லுப்பு ..
மேல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு
வாங்கவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ


கண்கள் நீயே..காற்றும் நீயே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்:சித்தாரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்த தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய்

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழைந்தாயக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மேதைகுள்
என் முத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

காதல் ஒரு தேவதையின் கனவா?

பாடல் : காதல் ஒரு தேவதையின் கனவா?

படம்: மெரினா

இசை: கிரிஸ்

பாடியவர்கள்: ஹரிசரண் , மானசி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?

காதல் அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல் வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?

காதல் மின்னலின் துகளா?
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல் மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?

கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல் இம்சையின் மகனா?
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..

பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?

கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள

படம்: காஞ்சனா

இசை: தமன்

பாடியவர்கள்: சுஜித் ,தர்ஷணா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....(2)
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய‌ திண்ணுப்புட்டு
உங்கம்மா பெத்தாளா
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா

அட கருப்புக்கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்
ஏ செக்கச்செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குலுஃபி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்

(கருப்பு பேரழகா)

நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கரு மேகம் ம‌ட்டுந்தரும் பூமியில மழத்தூவும்
அழகு மழத்தூவும்
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்

அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான்
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி

(கருப்பு பேரழகா )

சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன் நீயும் கருப்பு
ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு
உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்
மாயக்கண்ணன் நீ என்னப்பண்ணா
தலைமேல உள்ள ஓடைப்பக்கம் இறைக்கிவச்சா
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும்
அட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட
கண்ணும்மண்ணு ஒண்ணும் புரியல
அடி கருப்பும் வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா
ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப்பாருப்புள்ள

( கருப்பு பேரழகா )

ஆத்தாடி மனசுதான்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஆத்தாடி மனசுதான்

படம்: கழுகு

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:பிரியா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..
அருகில் உந்தன் பாசம் இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் பார்க்கும் உனை உறவை தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் அப்போது உன் பேர சொல்வேன்டா

ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல…
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…
காலம் யாவும் நாளும், உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும்
உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடாஅஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

படம்: நண்பன்

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்:விஜய் பிரகாஸ் , சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
அஸ்க் அஸ்க்…

அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொயதேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ஒ..

பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..