Wednesday, November 7, 2018

தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே

பாடல்  : தாபங்களே ரூபங்களாய்
படம் : 96
வரிகள் : உமா தேவி
இசை : கோவிந்த்
பாடியவர் : சின்மயி

+++++++++88888888888888+++++++++++

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா

எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்

பாடல்  : எதுவரை போகலாம்  
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா 
வரிகள் : தாமரை
இசை : தர்புகா சிவா
பாடியவர் : சித் ஸ்ரீராம், ஷாஷா திரிபாதி
+++++++++88888888888888+++++++++++


எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்…
தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்…
தொடாமல் போகிறேன்…
யார்யாரோ கனாக்களில்…நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!

பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே…
நான் தான் இங்கே விசிறி..!

என் வீட்டில்…
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்…
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்…
நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்…
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்…
உயிரே..!

நேற்றோடு…
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !

காற்றோடு…
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !

உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்…
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!

தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்…
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!

எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்…

தேன் முத்தங்கள்

மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..

உன்போன்ற
இளைஞனை…
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!

பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ…
பூங்காற்றே நீ வீசாதே…
நான்தானிங்கே விசிறி..!

விளம்பர இடைவெளி மாலையில்

பாடல்  : விளம்பர இடைவெளி மாலையில் படம் : இமைக்கா நொடிகள்வரிகள் : கபிலன் வைரமுத்துஇசை : ஹிப்பாப் தமிழாபாடியவர் : கிறிஸ்டொபர் ஸ்டான்லி,ஸ்ரீனிஷா ஜெயசீலன்,  சுதர்சன் அசோக்
+++++++++88888888888888+++++++++++

ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...

காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே...

இவளின் கனவோ... உள்ளே ஒளியும்
இரவும் பகலும்... இதயம் வழியும்
வழியும் கனவு... இதழை அடையும்
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்...

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்....

நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே....

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மத‌மே இல்லா இறைவன் நீயோ
வயதை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்....

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...


Thursday, November 1, 2018

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன


பாடல்  : சொக்கவச்சப் பச்சக்கிளி 
படம் : உறியடி
வரிகள் : அந்தோணிதாசன்
இசை : அந்தோணிதாசன் 
பாடியவர் : அந்தோணிதாசன்

+++++++++88888888888888+++++++++++


தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா

யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்குவெக்கப்பட்டு போனதென்ன

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானேஎன் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி
செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி
கண்டேனடி காதலியே உன் முகத்த நேத்துத்தான்
கொண்டேன் ஆசைப் பூங்கொடியே
உன்கூட நான் சேரத்தான்

பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாததுபோல் நடிக்காதே
பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்

கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்
செல்லமடி நீ இருந்தா என் வாழ்க்கையும் சோலைதான்
புள்ளக்குட்டி பெத்து வாழும் ஆலம் விழுதப் போலத்தான்

கண்ணே என்ன விட்டு நீயும் ஒதுங்கிப் போக நினைக்காதே
காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

தானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே


பாடல்  : ஆக்சிஜன் தந்தாயே
படம் : கவன்
வரிகள் : கபிலன் வைரமுத்து
இசை : ஹிப்பாப் தமிழா 
பாடியவர் : ஹிப்பாப் தமிழா , சுதர்சன்

+++++++++88888888888888+++++++++++

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே.
கனாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்.
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா.
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ.
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
காலமதை தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்.
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது.
இணையில்லா பொருளல்ல
அடி காதல் மனதில்.
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அலகு.
ஆண்ட கதையில் கூட
அநியாய தூரம் தொல்லை.
உன் இதயம் அறியாது அழகே
என் இதயம் எழுதும் சொல்லை.
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை.
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்


பாடல்  : கண்ணை விட்டு கன்னம் பட்டு
படம் : இருமுகன்
வரிகள் : மதன் கார்கி
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு 

+++++++++++88888888888888+++++++++++


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே

இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் நுழைப்பேனா
செதிலாய் செதிலாய் இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென உனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இன்கே
நம்முன் பூத்த காதல் எங்கே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
கண்ணை விட்டு கன்னம் பட்டு


ஹே... பெண்ணே என் நெஞ்சில்


பாடல்  : ஹே... பெண்ணே என் நெஞ்சில்
படம் : ப்யார் ப்ரேமா காதல்
வரிகள் : நிரஞ்ஜ‌ன் பாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : சித் ஸ்ரீராம்

+++++++++88888888888888+++++++++++

ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே

ஜன்னலோரமாய் முன்னாலே 
மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ வில‌காதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே


என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தையை சொல்லுமா


குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே

ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்


பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம்


பாடல்  : பொட்ட காட்டில் பூவாசம்
படம் : பரியேரும் பெருமாள்
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண்ன்
பாடியவர் : யோகி சங்கர் , பரீதா

+++++++++88888888888888+++++++++++

பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்


பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்ரெக்கை வெச்சான்

வானத்தை அள்ள

கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…

ஓரம் நிக்க தேவை இல்ல

ஓட பக்கம் புல் காஞ்சதில்ல

ஓசை இப்போ எருது

காத்தில் மெல்ல ஆ…இக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளைபொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம் (2)


ஆசை வெச்சேன்

பாத்துக்கணும் உள்ள

வேற முகம் கை வசம் இல்ல

பத்து மனம் நிக்கவில்லை

மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை

வேளை வந்தா

தானா அகப்படும் தவளைஇக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளைபொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம் (2)


நின்ன மழை கூர ஒட்டி

ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்

வீடு வந்து சேர்ந்த பின்னும்

என் நினைப்பில் தூவி வச்சான்


பஞ்சாரத்த தூக்குநாளும்

ரெண்டு நொடி கோழி நிக்கும்

என் மனச மாத்துனாலும்

நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்


சொல்ல வந்த வார்த்தை இப்போ

தொண்ட குழி தாண்டவில்லை

மாயா திரை போட்டு என்னை

உள்ள அடிச்சான்


ரெக்கை வெச்சான்

வானத்தை அள்ள

கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ….இக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளைபொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்ஆ…..ஆ….ஆ…..ஆ……

 
பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்


ஆ…..ஆ…..ஆ…..

மாயா திரை போட்டு புட்டான்

உள்ளை வச்சு பூட்டி புட்டான்

மாயா திரை போட்டு புட்டான்

உள்ளை வச்சு பூட்டி புட்டான் (2)


 ஆ…..ஆ….ஆ…..ஆ……

ம்ம்….ம்….ஓ…ஓ….


சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு


பாடல் : சிட்டு குருவி ஒன்று 
படம் : செக்க சிவந்த வானம்
வரிகள் : வைரமுத்து
இசை : ஏஆர் ரகுமான் 
பாடியவர் : ஏஆர் ரகுமான் 

+++++++++88888888888888+++++++++++

நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்துபடும்
மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்கா நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ...

நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ...!

நீல மழைச்சாரல் நநந.... ந நநநா....

அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

முகிலன்னம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...?
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...?

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்..

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்...

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்

பாடல்  : கார்குழல் கடவையே
படம் : வட சென்னை
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண‌ன்
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி , பிரதிப் குமார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்

எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள்

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்

பாடல்  : யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
படம் : விக்ரம் வேதா
வரிகள் : உமா தேவி
இசை : சாம் CS
பாடியவர் : அனிருத் சக்திஸ்ரீ கோபாலன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்குற என்.
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்குற என்.
கனவினில் முளைக்கிறாய்
இமை ஆணைக்கயில் நான்.
வினா வென அலைகிறேன்
உன்னை நினைக்கையில்.

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ...
நீ என்பதேய் நான் என்கிற நீயே.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ...
நீ என்பதேய் நான் என்கிற நீயே.

யாஞ்சி என்

மென்மையாய் மெல்ல நகரும்
எந்தன் நாட்குறிப்பில்
வன்மயாய் நீ வந்து
சேரும் மாயம் என்ன.
என்னவோ செய்கிறாய்
நீ என் ஆயுள்
எல்லைகள் போல் ஆகிறாய்.
ஓ ஹோ ஓ
காந்தமா என்னை எர்க்கும்.
உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை கட்டி
போடும் ஜாலம் என்ன.
கேட்கிறேன் கூரடி பெண்மையே.

வாழ்க போகும் தூரம்
நீயும் நானும் போக வேணும்.
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது
நீ எந்தன் பபாதி என்றும்.
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓடுது.

யாஞ்சி

உன் விரல் என்னை
செல்லமாக தீண்டும் நேரம்.
என் நிழல் உன்னை
ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்.
போர்வையில் நூல் என்ன
சேர்ந்து கொண்டோமே
எப்போதும் கண் மூடியே.

பிரம்மனால் ஆன
பொம்மலாட்டம் பூமி மீது
நூலினால் ஆடும்.
பொம்மையாக நீயும் நானும்
ஆடுவோம் சாடுவோம் மீழ்வோம்.

ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து
வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது.
என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு
கொடிகள் ஏந்தி உன்ன முத்தம்
செய்ய சொல்லி கூவுடு.

யாஞ்சி
ஓ ஹோ ஓ.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ
நீ என்பதேய் நான் என்கிற நீயே.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ
நீ என்பதேய் நான் என்கிற நீயே.

வசந்த காலங்கள் கசந்து போகுதே

பாடல்  : வசந்த காலங்கள்
படம் : 96
வரிகள் : உமா தேவி
இசை : கோவிந்த்
பாடியவர் : சின்மயி

****************************

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…

பார்வையின் பாராமையில்
வாழுமோ என் நெஞ்சம்…
வார்த்தைகள் கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…

ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே

வா…பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே..

காதல் நிலவை அட நான் காயவா
காலை ஒளியில் ஏமாறவா வா…
காயும் இருளில் அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே அழகே…

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ...