Tuesday, August 16, 2011

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது..

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : உன் பேரே தெரியாது உன்னை

படம்: எங்கேயும் எப்போதும்

இசை: சத்யா

பாடியவர்கள்: மதுஸ்ரீ

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))



உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

வாடா பின் லேடா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : வாடா பின் லேடா

படம்: மங்காத்தா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: க்ரீஷ், சுசித்ரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா

மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான்
இன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும்
படுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான்
உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே

க்ரிக்கெட் என்பது ஃபிக்ஸிங்தான்
காதல் என்பது மிக்ஸிங்தான்
இங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் கேட்சுதான்
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்
விடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில்
எனக்கு வாச்சது பிச்சுதான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா
அடிச்சு ஆடுற தோணிதான்
அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே

ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் டூட்டியடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : காஞ்சனமாலா காஞ்சனமாலா

படம்: வந்தான் வென்றான்

இசை: S தமன்

பாடியவர்கள்: கார்த்திக், பிரியா ஹிமேஷ்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))



மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல
செல்ல செல்ல செல்ல செல்ல

காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா

பெண்ணே என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே

மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா

போகும் தூரம் என்ன சொல்லு வானம் வானம்
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு நீ தான் மேகம்
நீ தேட சொல்லும் காடானால் தேடி பாது
நீ தூங்க செய்யும் வீடானால்
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா

கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய் கற்று கொண்டாய்
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ கரை சேர்வேன்
என் உள்ளங்கையில் வெப்பம் நீ
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா....


கோவிந்தா கோவிந்தா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கோவிந்தா கோவிந்தா

படம்: எங்கேயும் எப்போதும்

இசை: சத்யா

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
மெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
அட என கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கண்ணாடி நீ கண் ஜாடை நான்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கண்ணாடி நீ கண் ஜாடை நான்

படம்: மங்காத்தா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: SPB சரண், பவதாரிணி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
நாஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்

தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்