Saturday, January 10, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம்.. ஆ ஆ ஆ ஆ
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கன்னிமானே
சுற்றம் செய்த குற்றம்தானே

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ் நிலை
உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ் நிலை

மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாளே
அலையலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால் கரை வரக்கூடும்
விதி வழிப் போனானே
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது.... என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோர்க்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

எல்லோரும் சொல்லும்

ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா

கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

(எல்லோரும்)

அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)

இன்னாம்மா பண்ணலாம்

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)