Thursday, February 25, 2016

நெஞ்சோரமா ஒரு காதல்


பாடல்  : நெஞ்சோரமா ஒரு காதல் 
வரிகள் : ஹிப்பாப் தமிழா
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர் : கவுசிக் கிரிஷ் , பத்மலதா

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து 
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும் 
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்
 
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட

2 comments:

Raj said...

Nice Song Lyrics of this songs.

Anonymous said...

😍