பெ: கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
ஆ: நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
பெ: ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது
ஆ: ஏன் இன்று ஏன் இன்று
உன் அழகுகள் இக்கனம் பதறியது
(கவிதை
பெ: நீ செல்ல மிருகம் நல்ல
நரகம் நடுவில் நான் யாரோ
ஆ: நான் பிள்ளை பருவம்
இன்ப வடிவம் இடையில் நீ தேரோ
பெ: நீ நெஞ்சில் நடுவே
உந்தன் உயிரை உழுது நடவேண்டும்
ஆ: நீ நெற்றி முழுதும் உந்தன்
அழகை உதறி விடவேண்டும்
பெ: சில நேரம் மார்கழி ஆகிறாய்
சில நேரம் நீர்துளி ஆகிறாய்
ஆ: எதுவாக நான் ஆன போதிலும்
என் நீ நீ நீ.......... நீந்துகிறாய்
(நிலவின்
ஆ: நீ ரெண்டு விழியால் சண்டை இடலாம்
எதுவும் தவறில்லை
பெ: நான் பத்து விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை
ஆ: நான் பள்ளியறையில் தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை
பெ: நீ என்னை முழுதும் தின்று விடலாம் எதிலும் தவறில்லை
ஆ: ஏய் உனது ஆசை யாவையும் பேசிட
ஒரு கோடி ஆயுளும் கூடுமே
பெ: விடிகாலை தாவணி மாதிரி
அது நீ நீ................ ஆகிடுமே
(கவிதை
0 comments:
Post a Comment