ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
பெ: உள்ளதெல்லாம் அள்ளித் தரவா வா வா
வஞ்சியென்றும் வள்ளளல்லவா? காதல்
மல்லிகை வண்டாட்டந்தான்
போடு நீ கொண்டாட்டந்தான்
(மானின்
முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழிப் பெண்ணுக்கென காத்திருக்க
பெ: மொய் குழலில் பூ முடித்து
மங்கலமாய்ப் பொட்டு வைத்து பெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவைப் பாத்திருக்க
ஆ: இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக்கூடாதோ?
பெ: உன்னைத் தொடத்தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதோ?
ஆ: முன்னழகும் பின்னழகும் ஆட
இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும்
(மானின்
பெ: ஊசி இலைக்காடிருக்க உச்சி மலை மேடிருக்க
பச்சைக்கிளி கூடிருக்க பக்கம் வர வெக்கமென்ன மாமா
ஆ: புல் வெளியில் மெத்தை இட்டு
மெத்தையிலே உன்னை இட்டு சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு
பெ: அந்தி பகல் மோகம் வந்து அங்குமிங்கும் போராட
ஆ: எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக
பெ: செங்கரும்புச் சாறெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத் தந்துவிட்டேன் நானே
0 comments:
Post a Comment