Monday, May 21, 2007

நான் பார்த்ததிலே அவள்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

(நான் பார்த்ததிலே)

இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

(நான் பார்த்ததிலே)

0 comments: