காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
(காதல் பிசாசே)
கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை
(காதல் பிசாசே)
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
(காதல் பிசாசே)
0 comments:
Post a Comment