Thursday, May 17, 2007

காதல் மழையே

வச: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....

ஆ: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே....

ஆ: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி)
தேடிக் கிடைப்பதில்லை......
வாழ்ந்த வாழ்வெனக்கும் .......

குழு: காதல்.... காதல்.... காதல்....
(காதல்)

0 comments: