ஆ: கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
ஆ: ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலக் காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
(ராசா
பெ: ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே
ஆ: என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக
குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
(கொஞ்ச
0 comments:
Post a Comment