Monday, May 21, 2007

மலர்ந்தும் மலராத பாதி

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

பெண்:

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

ஆண்:

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

பெண்:

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

ஆண்:

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

6 comments:

Thamil said...

Intha mannum kadal vaanaum marainthu mudinthalum marakka mudiayathada...
URAVAI PIRIKKA MUDIYATHADA....
MIND BLOWING..........

Unknown said...

அண்ணன் தங்கை பாசம் கூற வேறு யாரும் இப்படி எழுதி இருக்க முடியாது

Unknown said...

Super song I liked






Unknown said...

Super song I liked






ரெங்க லெ.வள்ளியப்பன் said...

எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அழுகை பொங்கிப் பொங்கி வருகிறதே

Unknown said...

எனக்கும் எனது அப்பாவிற்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்