Thursday, May 17, 2007

ஒரு முறை தான்

ஆண்]
ஒரு முறை தான் ஒரு முறை தான்
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்
ஊரை வந்து பூ தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கை செர்த்து
அட்சதை போடும் சந்தோசம்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்
பெற்றவர்க்கு பிள்ளைகளாள்
சந்தோசம் சில முறைதான்

[இசை]

எத்தனையோ ஆசை
எத்தனையோ ஏக்கம்
சுமந்திருந்த தந்தை நெஞ்சை
முறுக்கி விட்டு செர்ந்தோம்

[இசை]

கனவுகளும் கோடி
கற்பணைகள் கூடி
பெற்றவர்கள் கட்டிய கூட்டை
கலைத்து விட்டு செர்ந்தோம்
உடைந்த உறவு வருமா?
இழந்த மானம் வருமா?
இனியும் வசந்தம் வருமா?
காலம் திருப்பி தருமா?
வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே....

ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்
ஒரு முறை தான் தவறியதால்
அடைகிற வேதனை பலமுறைதான்..

[இசை]

யார் விழி நீரை..
யார் துடைக்க என்று..
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்

[இசை]

ஆதரவும் இல்லை..
ஆருதலும் இல்லை..
இருவருமே இடியை தாங்கி
இறந்து வாழ்கின்றோம்
ஒன்றாய் கூடியமர்ந்து
அன்பாய் உணவு பகிர்ந்து
தாயின் மடியில் கிடந்து
பாசம் பருகும் நிமிசம்
இனிமேல் என்று கிடைக்கும்?
தெரியவில்லை......

[இசை]

ஒரு முறை தான் ஒரு முறை தான்
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான்
ஊரை வந்து பூ தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கை செர்த்து
அட்சதை போடும் சந்தோசம்
ஒரு முறை தான் ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்
பெற்றவர்க்கு பிள்ளைகளாள்
சந்தோசம் சில முறைதான்

ஆ...ஆ...ஆ....... [இசை]

0 comments: