பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
(பச்ச மல)
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்
(பச்ச மல)
மூநாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பார்த்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மால
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்
(பச்ச மல)
0 comments:
Post a Comment