Friday, May 11, 2007

சொல்லாயோ சோலைக்கிளி

சொல்லாயோ சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...

இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே

சொல்லாது சோலைக்கிளி
சொல்லிக் கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே....

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே
ஒற்றைக்கிளி ஒளிதல் போல
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...

பச்சைக் கிளி மூக்கைப்போல
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்..

நீயில்லாமல் சோலையில்லை
பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்..

பொய்யும் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி
எல்லாப் பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ ஹோய்

சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக் கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே

ஹோய்..சொல்லாயோ.. சோலைய்க்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே..

இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே

சேராத காதலுக் கெல்லாம்
சேர்த்து நம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானையளப்போம்..

புதிய கம்பன் தேடிப் பிடித்து
லவ்வாயனம் எழுதிடச் செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம்..

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்..
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்..
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்..

பூவும் பூவும் மோதிக் கொண்டால்
தேனைத்தாதே சிந்திச் சிதறும்
கையில் அள்ளிக் காதல் குடிப்போம்...

0 comments: