பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
(பனி விழும்)
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்
(பனி விழும்...........)
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..
(பனி விழும்.........)
4 comments:
"சிலை வாசம்" என்பதே சரி என எண்ணுகிறேன்.வைரமுத்துவின் சித்து வரிகள்!!!!!
Super
குழல் இனிது,யாழ் இனிது என்பது எல்லாம் இந்த பாடலுக்குப் பிறகு தான் என்றால் அது மிகையாகாது.
சிறை வாசம் என்பது தான் சரி..
சூழல் படி நாயகி நாயகன் பாதுகாப்பில் இருப்பார்.. அதனால் தான் சிறை வாசம்.. நன்றி
Post a Comment