நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி
குருதியில் நனைந்ததடி
உயிரே உயிரே
(நானும் உந்தன் உறவை......
இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா
வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன்
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில்
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில்
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா
(நானும் உந்தன் உறவை......
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகு செலுத்துகிறேன் வாராயோ
எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும்
தீபம் போல் மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன்
(நானும் உந்தன் உறவை...
0 comments:
Post a Comment