Wednesday, June 13, 2007

மேற்கே மேற்கே

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

Sunday, June 10, 2007

ஜூன் போனால்

ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)
(நேற்று என்பதும்)
(நேற்று என்பதும்

என் வீட்டுத் தோட்டத்தில்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்...அனுபவமோ

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

சாமிகிட்ட சொல்லி புட்டேன்

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே…

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…
நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…


சஹானா சாரல்



சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
(ஓராயிரம்) (2)

(சஹானா)
(என் விண்வெளி)
(ஓராயிரம் ஆண்டுகள்)
(சஹானா)


வைகாசி நிலவே

வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்
தீக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை
ஓ என் செய்வாய் நாளும் எனை
(வைகாசி நிலவே)

தூவானம் என தூறல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பியதே
கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
இதோ எனக்காக விரிந்தது இதழ்
எடுக்கவா தேனே
கனி எதற்காக கனிந்தது
அணில் கடித்திடத்தானே
ஹோ காலம் நேரம் பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)

நூலாடையென மேலாடையென
பாலாடை மேனிமீது படரட்டுமா
நானென்ன சொல்ல நீ என்னை மெல்ல
தீண்டித் தீவைக்கிறாய்
அனல் கொதித்தாலும் அணைத்திடும்
புனல் அருகினில் உண்டு
அணை நெருப்பாக இருக்கையில்
எனை தவிப்பதுகண்டு
ஹோ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராதம்மா
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)
(விழியில் இரண்டு)

அய்யய்யோ என்

ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
ஒத்த பனை மரத்துல
செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன்
சங்கதியை சொல்லி தாரேன் வாடீ... நீ வாடீ...
பத்து கன்னு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
?.. வாடி புள்ள கூச்சத்துக்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே...ஏ..லே..லே...லே...
ஏலே...ஏ...லே..லே...லே...
செவ்வெளனி சின்ன கனி..உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ..

அய்யய்யோ என் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
என் மனசுக்குள்ளே நோயை தைச்சான் அய்யய்யோ..
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தா புள்ள
அய்யய்யோ .. என் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் காயுறதே அய்யய்யோ
நாழி விதை வாசக்காரி..ஆள கொல்லும் பாசக்காரி..
என் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..
அய்யய்யோ.. என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சி அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ

கல்லுக்குள்ளே தேரை போலே.. வளைஞிருகும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
கால சுத்தும் நிழலை போல..பொட்ட காட்டில் உங்கூடவே தங்கிடவா
ஐய்யனாரை பாத்தாலே உன் நினைப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏண்டா
நான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..
? கண்ணு கருவாச்சியே.. நீ தொட்ட அருவா கரும்பாகுதே
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தா புள்ள


தாலியே தேவ இல்ல

ஆண்
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி

பெண்
தாலியே தேவ இல்ல நீ தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி

ஆண்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே

பெண்
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே

ஆண்
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்

பெண்
இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்

ஆண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

பெண்
அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா
உன்ன நெனச்சு ஓ..... ஓ..... (தாலி)

பெண்
எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டிபிடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே

ஆண்
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே

பெண்
அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது உன்ன

ஆண்
இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்

பெண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

பெண்
அடி சிரிக்கி நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயனுமே
என்ன உருக்கி ஓ....... ஓ....... (தாலி)

காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா.

(காதலின் தீபம் ஒன்று)

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா.

(காதலின் தீபம் ஒன்று)





மலரே மௌளனமா

மலரே மௌளனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

(மலரே)

எந்த பெண்ணிலும்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா?
தடவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)


பேருந்தில் நீ எனக்கு

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்
செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

கனாக் காணும் காலங்கள்

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ
(கனாக் காணும்)

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போன விரல்தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ
(கனாக் காணும்)

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை ஆ
(கனாக் காணும்)


என்னை பந்தாடப்

என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே
உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ
(என்னை பந்தாட)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென
செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
உன்னிலுள்ள வளம் என்னதென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே சிறு வெயிலே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே

இனியவனே இணையவனே
உன்னைக் காணவில்லை என்னும்போது
நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று
பற்கள் தலையணையைக் கடிக்கும்
உனைத் தொட்டுப் பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே என்னவனே
மூக்குமீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாடா

என்னைக் கொண்டாடப் பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே
உயிரை கண்கொண்டு கடைந்தவனே
உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ அன்பே

நச்சென்று இச்சொன்று

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று

செல்ல முத்தம் போடுகையில்
சின்ன சின்ன மின்சாரம்
தோன்றும் என்பார் பெண்ணே
சொல் தோன்றியதுண்டா கண்ணே
முத்தம் சிந்தும் வேளையிலே
மூளைக்குள்ளே விளக்கெரியும்
ஆமாம் என்றது பெண்மை
மின்சாரம் உள்ளது உண்மை
தப்பு தப்பாய் முத்தம்
தந்தேன் அன்பே உனக்கு
தப்பை மீண்டும் திருத்தி
கொள்ளும் வாய்ப்பை வழங்கு
தப்போடு என்னன்ன சுகமய்யா,
தப்பாமல் தப்பை நீ செய்வாயா


ஆசை பட்ட வெள்ளாடே
மீசை புல்லை மேயாதே
மேலும் மேலும் பசியா
என் மீசை என்ன ருசியா
குறும்பு செய்யும் பின் லேடா
கோபுரத்தை இடிக்காதே
கலகம் செய்வது சரியா
நீ கட்டில் காட்டு புலியா
கியரை கொஞ்சம் மாற்றி
போடால் கார்கள் பறக்கும்
இதழும் இதழும் மாற்றி
போட்டால் ஜீவன் தெறிக்கும்
கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே
என்னை நீ ஆராய செய்யாதே

பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு
அது போதுமா பசி தீருமா
இனி காமம் வந்து கத்தி வீசுமா
அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா
ம்ஹூம் ம்ஹூம் இன்னும் கொஞ்ச....

சுடும் நிலவு

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை
என்று தெரிந்து போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

என்னருமைக் காதலிக்கு

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!

மெல்லினமே மெல்லினமே

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்.
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

வெண்ணிலவே வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)

அன்பே அன்பே

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எதுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

(அன்பே)

கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே காலளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

(அன்பே)

Saturday, June 9, 2007

என்ன சத்தம் இந்த

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன)

கல்யாண மாலை

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண)

ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

(கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்...

(கல்யாண)

கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...அ அ அ ஆ
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி)

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி)

வளையோசை கலகலகல

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)

உயிர் வாழ்ந்திடும்

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் வந்து பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்.

(தைய தா)

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிலையானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே அது மிகையில்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

(தைய தா)

பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போல அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கு அணைக்கிறேன்; உடல் நொறுங்க ரசிக்கிறேன்
அணு அனுவை உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்.

விழிகளில் விழிகளில்

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
(ஈ ஜுஸ்ட் னீட் யொஉர் லொவெ)
காதல் என் காதில் சொல்வாய்
(ஜுஸ்ட் ஜுஸ்ட் கிவெ மெ லொவெ)

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

தா தின் தா தின் தாகட
தாகட தாகட த ======

சாலையில் நீ போகயிலே
மரம் எல்லம் கூடி
முனு முனுக்கும்

காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் கார்ட் என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்

அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிராய்

போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் ஸொர்பமே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

ரஹொ ரஹொ ரஹொ ரஹ
ரஹொ ரஹொ ரஹொ ரஹ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ

பூவிலே (பூவிலே)
செய்த சிலை அல்லவா
பூமியே (பூமியே)
உனக்கு விலை அல்லவா
தெவதை (தெவதை)
உந்தன் அருகினிலே
வாழ்வதே (வாழ்வதே)
எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றொடு அடி இன்றொடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித் தான்
என் பொழுதும் விடிந்ததே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

நினைத்து நினைத்து

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....


சென்னை செந்தமிழ்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகியே உன்னிடம் ஆ...
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்ட்ரிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர தட் ர தட் ஆ ர

காதல் கதக்களி
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

அஞ்சலி அஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழக்திற்கு கவிதாஞ்சலி
(அஞ்சலி ...)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி
மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே ...)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போஅனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ...

(பூவே ...)

போகாதே போகாதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்


உன் பார்வையில்

உன் பார்வையில் பைத்தியமானேன்
உன் வார்த்தையில் வாக்கியமானேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான்
உன்னில் மறை முகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே

எது இதுவோ எது இதுவோ
உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
என் தோழி நீ உன் தோழன் நான்
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆணாசை நான் பெண்ணாசை நீ
ஆசைகள் பேராசை தான்

உனதருகே இருப்பதனால்
இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருப்பதினால்
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடிதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்

Friday, June 8, 2007

என் காதலே என் காதலே

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

நன்றி சொல்லவே

நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

ஆத்தங்கர மரமே

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஒடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஒடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

(ஆத்தங்கர மரமே)

மாமனே உன்னை காணாம
வட்டியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஒடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

(ஆத்தங்கர மரமே)

தாவணி பொண்ணே சுகம் தானா
தங்கமே தழும்பும் சுகம் தானா
பாறையில் சின்ன பாதம் சுகம் தானா
தொட்ட பூ எல்லாம் சுகம் தானா
தொடாத பூவும் சுகம் தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகம் தானா
அயித்தயும் மாமனும் சுகம் தானா
ஆத்துல மீனும் சுகம் தானா
அன்னமே உன்னயும் என்னயும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகம் தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயில பசு தோதாச்சு

(ஆத்தங்கர மரமே)

அழகே சுகமா உன்

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா? உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
(அன்பே)
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா

ரகசியமானது காதல்

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

(ரகசியமானது)


மின்சாரம் என் மீது

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே (2)
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)

என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன
தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய்
புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண்ணென்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே (4)

மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால்
என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே (4)
(மின்சாரம் என் மீது)

நிற்பதுவே நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.


காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கடலழகோ

மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி

இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே
தொடர்ந்திடும்

(காதல்)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ

இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
தினந்தினம்

(காதல்)



சோலைப் புஷ்பங்களே

ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

ஓஓஓஓஓஓஓஓஓஓ

கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி
நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம்
சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

Thursday, June 7, 2007

செவ்வானம்

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்ததில் காதலின் எடை
என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

[செவ்வானம்...]

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

[செவ்வானம்...]
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

Wednesday, June 6, 2007

நன்றி சொல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான்
புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளநி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே,..

நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி
பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நேசபட்டு பட்டு நானிளைத்தேனே
அககா கா கா கக கா கா
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறதய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா


காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்...
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
அககா கா கா கக கா கா
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும்
உரவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

மேகமே மேகமே

மேகமே மேகமே பால்னிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே

(மேகமே)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ.....
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ

(மேகமே)

தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ...

(மேகமே)

கொஞ்சும் மஞ்சள்

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்


தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு
வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்.
படகுகளா இது? பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது!
உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே!
அடடா என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.

உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்.
புல் நுனியினில் பனித் துளி போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்.
மயங்குகிறேன் அதில்,
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ?
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது.
உன் வளையோசையில் நடந்தது இரவே!
நினைத்தால் என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.

ரோஜாஒன்று முத்தம்

ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
மயக்கத்தில் தோஎறி மடியினில் சார்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
]
தங்கமே நீ தழுவும்
பட்டு சேலை நழுவும்
தென்றல் வந்து விலக்கும்
அது உதடோடு பழக்கம்
சொர்க்கம் எங்கே என்றே தேடி
வசல்வந்தேன் மூடாதே
மேளம் கெட்க்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உள்ளே வாழாதே..
அல்லி பூவின்மகளே
கன்னி தேனை தா

ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்
மயக்கத்தில் தோஎறி மடியினில் சார்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்க்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இங்கு சேரும்

மண்ணிலே மண்ணிலே

மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

மண்ணிலே மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
பூ சிதரிடும் மேகம்
பொன்வானவில் வரைகிரதோ
ஏழ் நிரங்களினால்
நமக்கொருமாலை செய்கிரதோ
வாந்தாரகை எல்லாம்
நீர் பூக்களின் தோரணமோ
வாந்தேவதைகள் கூரும் அட்சதயோ
இத்தனை மழையிலும்
இந்த நாணம் கரையவில்லை
கண்ணினால் நனையலாம்
கற்ப்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இதுவரை புரியவில்லை

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

நான் காதலை சொல்ல என்
வாய்மொழி துணையில்லையே
கண்வார்த்தைகளால் மழைதுளி
என்மனம் சொல்லியதே
உன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழைதுளி
அம்பலம் ஆக்கியதே
மழைவிழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அடிமலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில்விளும் அதிசயம் அறிவாயா

ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா
ஐ லவ்யூ சய்லஜா ஐ லவ்யூ சய்லூ சய்லூ சய்லஜா

மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்..
காதில் கேட்க்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிவாசை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேரசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே,,,,


உடையாத வெண்ணிலா

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்

(உடையாத)

அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

ஆசை நூறு வகை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும்
வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ
வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான்
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம் உன்னில்
நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை
பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும்
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

(நீ காற்று)

Monday, June 4, 2007

குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

(குருவாயூரப்பா)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே

(குருவாயூரப்பா)

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே

(குருவாயூரப்பா

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான)

கண் மூடி திறக்கும் போது

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்...
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..
நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா..

(கண் மூடி திறக்கும் )


வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்...
வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே..
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும்
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது..
பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று..


( கண் மூடி திறக்கும்)

காதலியே காதலியே

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே

கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம்
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்

ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்
ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய்

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ

இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ

கண்ணுக்குள் நூறு நிலவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

( கண்ணுக்குள் நூறு நிலவா.... )


தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?

வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?


(கண்ணுக்குள் நூறு நிலவா....)


ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போதும்


(கண்ணுக்குள் நூறு நிலவா....)