அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஒடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஒடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது
(ஆத்தங்கர மரமே)
மாமனே உன்னை காணாம
வட்டியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஒடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
(ஆத்தங்கர மரமே)
தாவணி பொண்ணே சுகம் தானா
தங்கமே தழும்பும் சுகம் தானா
பாறையில் சின்ன பாதம் சுகம் தானா
தொட்ட பூ எல்லாம் சுகம் தானா
தொடாத பூவும் சுகம் தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகம் தானா
அயித்தயும் மாமனும் சுகம் தானா
ஆத்துல மீனும் சுகம் தானா
அன்னமே உன்னயும் என்னயும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகம் தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயில பசு தோதாச்சு
(ஆத்தங்கர மரமே)
0 comments:
Post a Comment