காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ
பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே
கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம்
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்
ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்
ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய்
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்
தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ
இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ
ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ
பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ
0 comments:
Post a Comment