நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
0 comments:
Post a Comment