Thursday, June 7, 2007

செவ்வானம்

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்ததில் காதலின் எடை
என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

[செவ்வானம்...]

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன

[செவ்வானம்...]
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

0 comments: