தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் வந்து பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்.
(தைய தா)
நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிலையானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே அது மிகையில்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்
(தைய தா)
பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போல அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கு அணைக்கிறேன்; உடல் நொறுங்க ரசிக்கிறேன்
அணு அனுவை உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்.
0 comments:
Post a Comment