Tuesday, March 20, 2007

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா..
கலடலை கரயை கடந்திடுமா..
காதலை உலகம் அறிந்திடுமா..
நினைப்பது எல்லாம் நடந்திடுமா..

ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்..
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே..
எனை இன்னும் வாழ சொல்லுதடா..
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்..
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்..
காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே..
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே..
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே..
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா...
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்..
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா..
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்..
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்..
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா..
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா..
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா..
உன்னை விட கல்லறையே பக்கமடா ..ஆஆ..

( விடிகின்ற பொழுது


0 comments: