Saturday, October 13, 2007

எனதுயிரே எனதுயிரே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.


மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே

முகத்தை எப்போதும்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...


ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..

போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..


அழகு குட்டி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாலம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ஏதேதோ எண்ணங்கள்

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்ததே....

பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்..
நெருங்கிய கனவே நொருங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்..
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே...
காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே..
சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே..
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே..
முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து
முதல்முறை பிறந்தது தனிஉணர்வு..
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உறவு
கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன்
உனக்குள் விழுந்திடவே
இமைகளை பிளந்தேன் இமைகளை
திறந்தேன் உடனே பறந்திடவே
யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே
திரும்பமல் போனால் பாதி ஜீவன் போயிடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே.

அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..

Thursday, October 11, 2007

பேசுகிறேன் பேசுகிறேன்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........


சொல்லி தரவா

சொல்லி தரவா சொல்லி தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே

அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே

உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே

அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே

காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டு தாழ் திறக்கும்

ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேன் இருக்கும்

காதல் மழை தூறுமே
கட்டில் கப்பல் ஆடுமே

பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே

ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத
வீட்டுப் பாடம் இது

(சொல்லி தரவா )


ஆசை யாரை விட்டது
மானம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது

வார்த்தை உச்சி கொட்டுது
பார்வை பச்சை குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது

பார்வை என்னைத் தீண்டுமே
கைகள் எல்லை தாண்டுமே

பூவை தொடும் நேரமே
புத்தி மாறிப் போகுமே

இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது

இங்கே என் காதில் சொல்லும் எல்லாமே
எங்கே நீ கற்றது
(சொல்லி தரவா )

என்னை தாலாட்டும்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா...
உன்னை நான் என்பதா.......
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையகிறேன்...
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம்வரை உயிர் வாழ்கிறேன்...
முதல் நாள் என்மனதில் விதயாய் நீயிருந்தாய்..
மறுனாள் பார்க்கையிலே மரமாய் மாறிவிட்டாய்....
நாடிதுடிபோடு நடமாடி நீ வாழிராய்
நெஞ்ஜில் நீ வாழ்கிறாய்.....

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சில் காற்றாகுமே..
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்ககுமே
அன்பே நானிருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்..
தீபம் நீ என்றால் அதில் நானே திரியாகிரேன் தினம் திரியாகிரேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா...
உன்னை நான் என்பதா.......
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னுஞ்ஜல் நானல்லவா....

உன் பார்வையில்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Wednesday, October 10, 2007

ஓ இந்த காதல்

ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...(2)
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...

காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்ஜும் நூல்கந்தா..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதய்க்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்ஜம்தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

பிரம்ம என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னனே...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்ஜோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்ஜென்றால் ஒரு முறை கொல்லுமடி..
உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...

Tuesday, October 9, 2007

பொத்திவச்ச மல்லிக

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா மடிசாயும் காலமா
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாற்று சூடுயேற்றுது........

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................

ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ஜகுளிச்சேன்
கொஞ்ஜம் நேரம் மறன்ஞ்சு பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆளானதே ரெம்ப நாளனதே..................

Monday, October 1, 2007

அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தயயை போல்
ஒழிந்திருந்த ஒரு நெஞ்ஜம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள் நீ கொஞ்ஜம்
மின்னல் வந்து விழக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்.
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கெட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அளைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம்
அத்தனையும் நெஞ்ஜம் இன்று மரைக்கிரதே


நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...

அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..
தேவதையின் கதை கேட்டு
சின்ன வயதில் துங்கினேன்
தூக்கம் பரிக்கும் தேவதயை
நேரில் இன்று பார்க்கிரேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகி போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே