Wednesday, May 19, 2010

விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :விழி ஒரு பாதி விரல்

படம்:சிக்கு புக்கு

இசை:ஹரிஹரன் - லெஸ்லி

பாடியவர்கள்:அட்னான் சாமி, சுஜாதா

வரிகள்:வாலி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

விழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்

சிறு நூலாடை போல நான்
இடை மேல் ஆட வேண்டுமே
அதற்கொரு நாள் பார்த்து வருகிறேன்

(தொலைந்தது..)

நீ வைத்த விழிகளில் ராவெல்லாம்
நான் வைத்த கனவுகள் போதுமோ
நீ வைத்த கனவுகள் நாளெல்லாம்
தீ வைத்த கொடுமையை கூறவோ
நிதம் வரும் வரும் நீல மேகம் நாம்
நேசம் கண்டு நல்வாழ்த்துக்கள் கூறவும்
இலக்கணம் தழுவிய இலக்கிய உறவிது
தேவ தேவி தாங்கள் மேனி அணைத்தேன்

(தொலைந்தது)

தூரத்தில் இருக்கின்ற வான் அதன்
ஈரத்தில் மிதக்கின்ற வாடையில்
நெஞ்சத்தில் இனிக்கின்ற காட்சிகள்
நாம் கொண்ட உறவுக்கு சாட்சிகள்
பிறர் விரல் தொடும் நீங்கிடாது
ஒரே நோன்பிடாது நம் நேசம் வாழும்
இடி பல கலங்கிது
எவர் இதை அறிவது
வானம் பூமி வாழும் காலம் வரை

(விழி ஒரு பாதி )

0 comments: