Thursday, April 19, 2007

பருத்திவீரன் பாடல்

அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே
செடிபோல ஆசை மொளைக்குதே

வெட்டவெளிப் பொட்டலிலே மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி கூரையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியிலே சீர்வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்

ஓஹோ அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டுப் படிக்கல
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
அவன் பூமிக்குத் தொட்டுவச்ச சேனை
ஒடைமாத்தி நடைமாத்தி அடியாத்தி இந்த வயசுல
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்தபாலையே காம்பில் புகுத்திட
கணக்குப் போடுதே ரெண்டுந்தான்
கோரைப்புல்லிலே மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது தோளுல சாயுது
ஊரையும் ஒறவயும் மறந்து
நடுக்காட்டுல நடக்குது விருந்து
நத்தைக்கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமோ சேர்ந்து
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி இந்த வயசுல
(அறியாத வயசு)


0 comments: