Wednesday, February 24, 2016

அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்


பாடல்  : அந்த சாலை ஓரம் 
படம் : கதகளி
வரிகள் : ஹிப்பாப் தமிழா
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர் : ஹிப்பாப் தமிழா

###############888888888888##################

அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இருகைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்

உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

தேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே
நான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே
நான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே

உந்தன் மடியினிலே  ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே

பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

0 comments: