பாடல் : ஆகாசத்த நான் பாக்குறேன்
படம் : குக்கூ
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : பிரதிப் , கல்யாணி
#########HHHHHHHHHHHH#############
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே
இனி என்னோட அழகா பொன்னான உலக
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஊரு கண்ணே படும் படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்ன தூக்கி சுமப்பேன் கருவிலே
மடி வாசம் போதும் ஒறங்கவே
நீ தானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே ஒங்கரமாய்
கோடியே கோடியே அழுரேனே ஆனந்தமாய்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
காம்ப தேடும் குழந்தையாய்
உன்ன தேடும் உசுரு பசியில
கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதும் இல்ல
நீ போதும் நானும் ஏழை இல்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
0 comments:
Post a Comment