Saturday, May 31, 2008

கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

0 comments: