முகம் பூ மனம் பூ
விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ
சிரிப்பு திகைப்பு
நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு
நடை போடும் மலர் காடி
ஒரு பூவும் போதுமா சொல்
எனை பூவாய் உன்னில் சூட
சுகமாகுமா சுமையாகுமா
இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா
(முகம் பூ..)
உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை
ரோஜாப் பூவில் துளைத்த நிறம்
மீசை என்னும் காம்பினில் பார்த்தேன்
நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம்
ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி
ஒவ்வொரு விரலும் சாமந்தி
நீ என் பூ நான் உன் பூ
நாம் சேர சேர மாலை ஆகலாம்
உடை மலரே உடை மலரே
குடைவாய் உடைகாய் நீ
நானே நானே சூரிய காந்தி
என்னை சுற்றும் சூரியன் நீ
நானே நானே சந்திரப் பார்வை
என்னை வளர்த்தும் அல்லியும் நீ
உன் விரல் உரசும் ஒரு கணத்தில்
எனக்குள் நூறு சந்த்னப் பூ
உன் கண்கள் ஊதாப் பூ
ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல்
ஒரு பொழுது சிவந்து விடும்
நானும் ஜாதிப் பூ
(முகம் பூ..)
0 comments:
Post a Comment