Thursday, November 1, 2018

பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம்


பாடல்  : பொட்ட காட்டில் பூவாசம்
படம் : பரியேரும் பெருமாள்
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண்ன்
பாடியவர் : யோகி சங்கர் , பரீதா

+++++++++88888888888888+++++++++++

பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்


பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்



ரெக்கை வெச்சான்

வானத்தை அள்ள

கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…

ஓரம் நிக்க தேவை இல்ல

ஓட பக்கம் புல் காஞ்சதில்ல

ஓசை இப்போ எருது

காத்தில் மெல்ல ஆ…



இக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளை



பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம் (2)


ஆசை வெச்சேன்

பாத்துக்கணும் உள்ள

வேற முகம் கை வசம் இல்ல

பத்து மனம் நிக்கவில்லை

மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை

வேளை வந்தா

தானா அகப்படும் தவளை



இக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளை



பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம் (2)


நின்ன மழை கூர ஒட்டி

ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்

வீடு வந்து சேர்ந்த பின்னும்

என் நினைப்பில் தூவி வச்சான்


பஞ்சாரத்த தூக்குநாளும்

ரெண்டு நொடி கோழி நிக்கும்

என் மனச மாத்துனாலும்

நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்


சொல்ல வந்த வார்த்தை இப்போ

தொண்ட குழி தாண்டவில்லை

மாயா திரை போட்டு என்னை

உள்ள அடிச்சான்


ரெக்கை வெச்சான்

வானத்தை அள்ள

கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ….



இக்கரையில் நானுமில்ல

மீட்டு எடுக்க பாலம் இல்ல

பத்திரமா பாக்கணும்

நீதான் இவளை



பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்



ஆ…..ஆ….ஆ…..ஆ……

 
பொட்ட காட்டில் பூவாசம்

சிட்டு புள்ள சாவாசம்

என்னை காக்கும் உன் நேசம்

புல்லு மேல ஆகாசம்


ஆ…..ஆ…..ஆ…..

மாயா திரை போட்டு புட்டான்

உள்ளை வச்சு பூட்டி புட்டான்

மாயா திரை போட்டு புட்டான்

உள்ளை வச்சு பூட்டி புட்டான் (2)


 ஆ…..ஆ….ஆ…..ஆ……

ம்ம்….ம்….ஓ…ஓ….


சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு


பாடல் : சிட்டு குருவி ஒன்று 
படம் : செக்க சிவந்த வானம்
வரிகள் : வைரமுத்து
இசை : ஏஆர் ரகுமான் 
பாடியவர் : ஏஆர் ரகுமான் 

+++++++++88888888888888+++++++++++

நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்துபடும்
மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்கா நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ...

நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ...!

நீல மழைச்சாரல் நநந.... ந நநநா....

அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

முகிலன்னம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...?
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...?

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்..

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்...

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்

பாடல்  : கார்குழல் கடவையே
படம் : வட சென்னை
வரிகள் : விவேக்
இசை : சந்தோஷ் நாராயண‌ன்
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி , பிரதிப் குமார்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்

உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்

எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே

கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே கனவுகள்

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்

பாடல்  : யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
படம் : விக்ரம் வேதா
வரிகள் : உமா தேவி
இசை : சாம் CS
பாடியவர் : அனிருத் சக்திஸ்ரீ கோபாலன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்குற என்.
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்குற என்.
கனவினில் முளைக்கிறாய்
இமை ஆணைக்கயில் நான்.
வினா வென அலைகிறேன்
உன்னை நினைக்கையில்.

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ...
நீ என்பதேய் நான் என்கிற நீயே.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ...
நீ என்பதேய் நான் என்கிற நீயே.

யாஞ்சி என்

மென்மையாய் மெல்ல நகரும்
எந்தன் நாட்குறிப்பில்
வன்மயாய் நீ வந்து
சேரும் மாயம் என்ன.
என்னவோ செய்கிறாய்
நீ என் ஆயுள்
எல்லைகள் போல் ஆகிறாய்.
ஓ ஹோ ஓ
காந்தமா என்னை எர்க்கும்.
உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை கட்டி
போடும் ஜாலம் என்ன.
கேட்கிறேன் கூரடி பெண்மையே.

வாழ்க போகும் தூரம்
நீயும் நானும் போக வேணும்.
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது
நீ எந்தன் பபாதி என்றும்.
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓடுது.

யாஞ்சி

உன் விரல் என்னை
செல்லமாக தீண்டும் நேரம்.
என் நிழல் உன்னை
ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்.
போர்வையில் நூல் என்ன
சேர்ந்து கொண்டோமே
எப்போதும் கண் மூடியே.

பிரம்மனால் ஆன
பொம்மலாட்டம் பூமி மீது
நூலினால் ஆடும்.
பொம்மையாக நீயும் நானும்
ஆடுவோம் சாடுவோம் மீழ்வோம்.

ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து
வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது.
என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு
கொடிகள் ஏந்தி உன்ன முத்தம்
செய்ய சொல்லி கூவுடு.

யாஞ்சி
ஓ ஹோ ஓ.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ
நீ என்பதேய் நான் என்கிற நீயே.
ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே.
ஓ ஹோ ஓ
நீ என்பதேய் நான் என்கிற நீயே.

வசந்த காலங்கள் கசந்து போகுதே

பாடல்  : வசந்த காலங்கள்
படம் : 96
வரிகள் : உமா தேவி
இசை : கோவிந்த்
பாடியவர் : சின்மயி

****************************

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…

பார்வையின் பாராமையில்
வாழுமோ என் நெஞ்சம்…
வார்த்தைகள் கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…

ஹ்ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே

வா…பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே..

காதல் நிலவை அட நான் காயவா
காலை ஒளியில் ஏமாறவா வா…
காயும் இருளில் அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே அழகே…

வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ...

Friday, February 26, 2016

நீயும் நானும் சேர்ந்தே செல்லும்

பாடல்  : நீயும் நானும் சேர்ந்தே 
படம் : நானும் ரவுடிதான் 
வரிகள் : விக்னேஷ் சிவன்
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத் , நீத்தி மோகன்

###############888888888888##################

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே
ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றாய் வீசினாய் காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவுநீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள (2)


தள்ளிப் போகாதே..


பாடல்  : தள்ளிப் போகாதே..
படம் : அச்சம் என்பது மடமையடா
வரிகள் : தாமரை
இசை : ஏ.ஆர். ரகுமான்
பாடியவர் : சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..

ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

கண்ணெல்லாம்..  நீயேதான்..
நிற்கின்றாய்..  விழியின்மேல்
நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..

நகரும் நொடிகள் கசையடிப் போலே
முதுகின் மேலே விழுவதினாலே
வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள்
எழுதா மொழிகள் எனது.. !!

கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே..
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்..
ஏன் அதில் தோற்றேன்.? ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.? தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. (2)

தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
(தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )

தேகம் தடை இல்லை என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
ஆனால் அது பொய் தான் என நீயும்
அறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா..

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...

கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்..
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்..
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..

நொடி நொடியாய் நேரம் குறைய..
என் காதல் ஆயுள் கறைய..
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..

விதியின் சதி விளையாடுதே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ அன்பே..