Tuesday, June 8, 2010

எங்கிருந்தாய் நான் மண்ணில்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :
எங்கிருந்தாய் நான் மண்ணில்

படம்: வின்னர்

இசை:யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள்:ஹாரீஸ் ராகவேந்திரா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)


ஒரு வானவில்லின் பக்கத்திலே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஒரு வானவில்லின் பக்கத்திலே

படம்:காதல் சொல்ல வந்தேன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:உதித்நாராயணன்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

(ஒரு வானவில்லின்..)

நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

எங்க நடக்கிறேன் எதற்கு நடக்கிறேன்
வழதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தப்பின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடத்திடும் மோதலா
இதயத்தில் கொதிக்கிற கழிச்சலே காதலா
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

கொஞ்சம் வெயிலாக கொஞ்சம் மழையாக

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : கொஞ்சம் வெயிலாக கொஞ்சம் மழையாக

படம்: மார்கழி 16

இசை: E.K.Bobbie

பாடியவர்கள்:ஹரிகரன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கொஞ்சம் வெயிலாக கொஞ்சம் மழையாக
கொஞ்சம் குளிராக வருவாய் அன்பே
கொஞ்சம் நிழலாக கொஞ்சம் குடையாக
கொஞ்சம் கனலாக வருவேன் உன் அருகே
எனதாயுள் பூராவும் ஒரு நொடியில் பறிபோகும்
இந்த மாயம் என்ன என்று
இனி யாரிடத்தில் கேட்க
சொல் என் கனவே

கொஞ்சம் வெயிலாக..

நீ வரும் பாதை எங்கும் பூக்களில் பாய் விரிப்பேன்
ஒவ்வொரு பூவுக்குள்ளும் இதமாக நான் இருப்பேன்
தீயிலும் உன் பெயர் எழுதியே நான் படிப்பேன்
கடவுளின் கவிதைகளை கடனாக நான் கேட்பேன்
உன் விழி பார்வைக்கு காத்திருந்தேன்
ஒவ்வொரு நொடி பொழுதும் தவம் கிடப்பேன்
இது காற்றில்லாத புது பூமி
நீ தென்றலாக வர வேண்டும்
இது ஊற்று இல்லாத ஒரு பாறை
நீ தண்ணீராக வர வேண்டும்
சொல்லாத சொல்லெல்லாம் மின்சாரமாய்
என் மீது பாய்கிறதே வா அன்பே

கொஞ்சம் வெயிலாக ..

நீ தரும் காற்றை வைத்து அழகான சிலை வடித்தேன்
நீ விடும் மூச்சை கூட நெஞ்சுக்குள் சிறை வைத்தேன்
நீ தரும் வானம் எங்கும் காற்றாக நான் பறப்பேன்
நீ இடும் கோலம் எல்லாம் இதமாக நான் பிறப்பேன்
நூல் மேல் நடக்க பழக்கி விட்டாய்
இருட்டுக்குள் தனிமையில் சிரிக்க விட்டாய்
இது கடல் இல்லாத oru கப்பல்
நீ வழிகளாக வர வேண்டும்
இது மொழி இல்லாத புது வார்த்தை
கவிதையாக தர வேண்டும்
வெயிலோடு மழை வந்து விளையாடுதே
கனவுக்கு விழி தந்து போகும் பெண்ணே

கொஞ்சம் வெயிலாக..

நிலா நீ வானம் காற்று

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

####################################################

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல் ....


பட்டு பட்டு பட்டாம்பூச்சி

பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ

அடி தத்தி தத்தி நீ ஓடுன
இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற
இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா
வாரே வா வா வா வா
நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான்
கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம்
வாரே வா வா வா
உன் பேச்சை கேட்டல
என்னோட வெட்கம் எல்லாமே
லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா

கடகட ரயிலப்போட தடத்த்ட சத்தம் போட்டு
நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ
புறப்படும் ஊரும் நீதான் சேர்ந்திடும் ஊரும் நீதான்
உனக்குள்ள சுத்திவந்தேனே நானே
யே பசிக்கிற நேரம் பார்க்குறேன் உன் முகம்
என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும்
வாரே வா வா வா வா
உந்தன் மூச்சு பட்டாலே
மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும்
வாசம் ஆளை தூக்கும்
வாரே வா வா வா வா
நீதான் எங்கே போனாலும்
கூடவே போ போ என்று
காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும்

விடு விடு சொல்லி பார்த்தேன்
விடுமுறை கேட்டு பார்த்தேன்
விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ
எதுருள்ள நிக்கும்போதும்
எங்கோ தள்ளி போகும்போதும்
பிரியவே இல்லை இன்னும் ஏனோ
உனக்காக பூமியிலே பொறந்தவ நானடா
ஒரு குரல் காட்டுக்குள்ளே கேட்கிறதே
வாரே வா வா வா
ஒரு காத்தாடி போல
உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி
வானில் போனேனே
வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா
உன்னோட முத்த காற்று
ஏறும் பாட்டு சூடா ஆனேனே

என்ன என்ன என்ன ஆகிறேன்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : என்ன என்ன என்ன ஆகிறேன்

படம்:காதல் சொல்ல வந்தேன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

(என்ன என்ன..)

பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்கும் ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் ஏது சுகம்
பெண்ணே உந்தம் முகம்
உன்னிடத்தில் என்னைக் கேட்டேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

(என்ன என்ன..)

விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருச்சமாகும் நேரம்
கனவெனக் கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்னை கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)


Wednesday, May 19, 2010

இறகைப்போலே அலைகிறேனே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

படல் :இறகைப்போலே அலைகிறேனே

படம்: நான் மகான் அல்ல

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா

வரிகள்: யுகபாரதி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அனியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல்
போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
(கண்ணோரம்..)

ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல்
வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்