Tuesday, August 25, 2009

அன்பே என் அன்பே

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
கனவினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

Wednesday, August 5, 2009

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்.....

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னுசின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
போதுவாக பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு
விலகாதஉறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு

புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னு சின்ன தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி கேலி கேலி
சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான்
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திபோக ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்

ஓ....
அரை டிரயர் போட்ட பையன்
நீ படாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு
வேரென்ன பூப்பூ அடைஞ்ச
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
வேரென்ன உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு

ஆஹ்...

மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ
ஓ ஹோ...
கமருகட்டு கடல முட்டாய்
வாங்கினாக்க வாயில் வெச்சு
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ...
ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன்
கோயிலில் கண் ஜாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேராரு ஆடி அசையும்
அழகு மணி தேரு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள போய் நின்னதாரு
வேராரு கூச்சம் விடத்த
ஈச்ச மர பூவு..

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க

லேசா பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )

Monday, August 3, 2009

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

படம்: புவனா ஒரு கேள்விக்குறி
எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
குரல் : S.P. பாலசுப்ரமண்யம்

.................................................................................................................................
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு
மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
நெத்தியில வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

உச்சந்தல வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தக்குட்டி நகருதடி!
கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்குன்னு சிரிக்குதடி!

ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால்..
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள்
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில்
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..