Wednesday, September 8, 2010

யாரது...யாரது யாரது...

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாரது...யாரது யாரது...

படம்: காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யாரது...யாரது யாரது...
யார் யாரது
சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

யாரது...யாரது யாரது...யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது


ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே

(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்

(ஐயய்யோ..)


நீல வானம் நீயும் நானும்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நீல வானம் நீயும் நானும்

படம்: மன்மதன் அம்பு

இசை: தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம் Blue Sky
நீயும் நானும் You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்........


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : யாத்தே யாத்தே யாத்தே

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ்


(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
(யாத்தே.....)
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே

(யாத்தே.....)


உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் சுத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

(யாத்தே.....)


அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்

(யாத்தே.....




நீயும் நானும் வானும் மண்ணும்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நீயும் நானும்

படம்:மைனா

இசை: இமான்

பாடியவர்கள்:Benny Dayal, Shreya Ghoshal

வரிகள்:ஏக்நாத்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே

நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்
நாம கேட்டதும் கிடைசிட்ட வாழ்கைய தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்
அட ஒன்னும் இல்லே
வாழ்க்கை கஷ்டம் இல்லே
அத நெனைச்சாலே போதும் புள்ளே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ளே

தெரு கோடியில் கெடந்த வாழ்க்கையும் தான்
இப்போ கோடியில் பொரளுதடா
இந்த பூமிய கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா
காதல் தானே மாற்றம்
நம்ம உயர தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு
வாழ்கை சுத்தும் பூவு
உன்ன கொண்டாடி போகும் புள்ளே

மயங்குறேன்டி மயங்குறேன்டி..

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : மயங்குறேன்டி.... மயங்குறேன்டி...

படம்: அய்யனார்

இசை: தமன்

பாடியவர்கள்:நவீன்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


மயங்குறேன்டி.... மயங்குறேன்டி...
மயங்குறேன்டி மயங்குறேன்டி..
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்
தனிமையில் புத்திக்கெட்டு ஏங்குறேன் டி..
நொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி
கனவுக்குள்ல சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி
ஏங்குறேன் டி ஏங்குறேன் டி
தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப் போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் டி வாயேன் டி
ஆடி ஆடி தேடித் தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி


(ஆத்தாடி..)

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தெனம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால்தானே ஓடுதடி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உன்னால் என்னை விரும்புறேன் டி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உந்தன் வழித்திரும்புறேன் டி

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கெனப் பிறந்தவள் நீ தான் டி

(ஆத்தாடி..)